Social Icons

..
.............

13 May, 2012

உன் உயிர் நான் அல்லவா ?

அன்னையர் தினம்,MOTHER'S DAY

எனது தேவைகள்
எனக்கு முன் தெரிவது
உனக்கு மட்டும் தான் ..

எனது விருப்பங்கள்
நானே மறந்தாலும் தெரிவது
உனக்கு மட்டும் தான் ..


வெகு தொலைவில் நீ
இருந்தாலும் எனக்கு
உடல் நலம் இல்லை என்றால்
தெரிவது உனக்கு மட்டும் தான் ..

என் அசைவில் சிறு
மாற்றம் ஏற்பட்டாலும்
தெரிந்து விடுகிறது
உனக்கு மட்டும் ..

என்னை பற்றி
எல்லாம் தெரிவது
உனக்கு மட்டும் தான் ..

உன் உதிரம் எனக்கு
தந்ததால் தான்
இந்த பிணைப்பா  இல்லை
நான் உன் உயிர் என்பதாலா ?
எனது
அருமை தாயே !

          


உங்கள் பார்வைக்கு :
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமான ஒட்டுபட்டையில் வாக்களியுங்கள் அன்பரே !

6 comments:

செய்தாலி said...

உண்மை
தாய் எல்லாம் அறிவாள்
நம் அகிலமே
தாய்

வரலாற்று சுவடுகள் said...

வழக்கமான கலக்கலுடன் சற்று தூக்கலாக அன்னையின் அன்பு வரிகலெங்கும் பரவிக்கிடக்கிறது ..!

வாழ்த்துக்கள் தல ..!

stalin wesley said...

தாய் பற்றி நல்ல கவிதை

Gopikannan said...

அருமை நண்பரே !

திண்டுக்கல் தனபாலன் said...

"இதற்கு மேல் என்ன வேண்டும? "

அரசன் சே said...

பாசத்தின் பிணைப்பை வரிகளில் கண்டேன் ... அழகிய படைப்புக்கு என் வாழ்த்துக்கள் தோழரே

 

உலகத் தரம்

INDIBLOGGER தரம்

உள்ளூர் தரம்

Tamil Blogs Traffic Ranking